» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்!

வியாழன் 28, செப்டம்பர் 2023 3:00:32 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 1-வது வார்டுக்குட்பட்ட புன்னவிளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 16-வது வார்டுக்குட்பட்ட ஹனீபா நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி. 31-வது வார்டுக்குட்பட்ட கார்மல் நகர், திருக்குடும்ப ஆலயம் டிரஸ்ட் எதிரே உள்ள தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், அமல செல்வன், சோபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory