» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கூடங்குளம் அணுஉலை அருகே கடலில் சிக்கிய இரு நீராவி ஜெனரேட்டர்கள் மீட்பு!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:44:52 PM (IST)

கூடங்குளம் அணுஉலை அருகே கடல் பாறையில் மோதியதால் சிக்கி நின்ற மிதவைக்கப்பலில் இருந்த 2 நீராவி உற்பத்தி ஜெனரேட்டர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியநாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் மூலம் மின்உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில் மேலும் 3 மற்றும் 4 அணுஉலைகள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இது தவிர 5 மற்றும் 6 அணுஉலைகளுக்கான கட்டுமானப்பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 5 மற்றும் 6 அணுஉலைகளில் பொருத்துவதற்கான இரண்டு நீராவி உற்பத்தி ஜெனரேட்டர்கள் ரஷியநாட்டில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. தூத்துக்குடியில் இருந்து இரண்டு நீராவி உற்பத்தி ஜெனரேட்டர்களும் மிதவை கப்பலில் (பார்ஜர்) ஏற்றப்பட்டு இழுவை கப்பல் மூலமாக கூடங்குளம் அணுஉலைக்கு கடல் வழியாக இழுத்து வரப்பட்டது.
இந்த மிதவை கப்பல் கடந்த 8ஆம் தேதி கூடங்குளம் அணுஉலை அருகே வந்தபோது இழுவைக்கப்பலில் இருந்து மிதவைகப்பலை இழுக்கப் பயன்படுத்தப்பட்ட இரும்பு கயிறு அறுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மிதவைகப்பல் அந்த பகுதி கடல் அடியில் உள்ள பாறையில் மோதி சிக்கியது. இதனால் மிதவை கப்பலை அங்கிருந்து இழுத்துவரமுடியவில்லை.
இதனை அடுத்து மிதவைகப்பலையும் அதிலிருக்கும் நீராவி உற்பத்தி ஜெனரேட்டர்களையும் மீட்கும் முயற்சியில் கூடங்குளம் அணுஉலை பொறியாளர்கள் மற்றும் கப்பல் ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர். மேலும் இலங்கையில் இருந்தும் அதிக திறன்கொண்ட இழுவை கப்பல் வரவவைக்கப்பட்டு மீட்கும் முயற்சி நடைபெற்றது. ஆனாலும், மிதவை கப்பலை மீட்க முடியவில்லை.
இதனை அடுத்து அணுஉலை பொறியாளர்கள் மற்றும் துறைமுக பொறியாளர்கள் கூடங்குளம் கடற்கரையில் இருந்து மிதவை கப்பல் வரையில் கடலில் சாலை அமைக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து கடலில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து முடிந்தது. பின்னர் பாறையில் சிக்கிய மிதவை கப்பலையும் அதிலிருக்கும் நீராவி உற்பத்தி ஜெனரேட்டரையும் அதிகதிறன் கொண்ட கிரேன் மூலமாக ஹைட்ராலிக் டிரைலரில் ஏற்றப்பட்டு பத்திரமாக கூடங்குளம் அணுஉலை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து நேற்று மாலையில், ஒரு நீராவி ஜெனரேட்டர் மீட்கப்பட்டது. பின்னர் அடுத்ததாக 2வது நீராவி ஜெனரேட்டரும் பத்திரமாக மீட்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் நீராவி ஜெனரேட்டர் பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து அணுஉலை பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)
