» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தளவாய்சுந்தரம் நியமனம்

வியாழன் 28, செப்டம்பர் 2023 12:15:31 PM (IST)

குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான தளவாய்சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் எஸ்.ஏ.அசோகன். ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி என இரண்டாக பிரிந்தபோது அசோகன் ஓ.பி.எஸ். அணியில் இடம் பெற்றார். இதையடுத்து மாவட்ட செயலாளர் இல்லாமல் செயல்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்த ரம் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சி தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக நிய மிக்கப்பட்டுள்ள தளவாய் சுந்தரம், தமிழக அரசின் முன்னாள் சுகாதார துறை அமைச்சராகவும், பொதுப் பணி துறை அமைச்சராகவும், எம்.பி.யாகவும், டெல்லி சிறப்பு பிரதிநிதி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory