» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி : வாலிபர் படுகாயம்!

வியாழன் 28, செப்டம்பர் 2023 12:09:37 PM (IST)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயரிழந்தார். உடன் சென்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.

குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சகரியா மகள் ஷானிகா (19). இவர் தூத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய உறவினர் வள்ளவிளை பகுதியை சேர்ந்த கிறிஸ்பின் (22). இவர்கள் இருவரும் நேற்று மதியம் ஒரே மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை கிறிஸ்பின் ஓட்டினார். அவருக்கு பின்னால் ஷானிகா அமர்ந்திருந்தார். 

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்ற போது கேரள மாநிலம் கொல்லத்திற்கு எம்.சான்ட் மணல் ஏற்றிக் கொண்டு வந்த டாரஸ் - பைக் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஷானிகாவும், வாலிபர் கிறிஸ்பினும் கீழே தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த ஷானிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கிறிஸ்பினை போலீசார் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே உயிரிழந்த ஷானிகா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory