» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

புதன் 27, செப்டம்பர் 2023 4:44:14 PM (IST)

நாகர்கோவிலில்  வருகிற 30ம் தேதி தமிழ்நாடு அரசின் உயர்திறன் மேம்பாட்டு மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம் - சுகாதார நலன் மற்றம் ரோஜாவனம் உயர்கல்வி நிறுவனம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம், நாகர்கோவில், தேரூர் புதுக்கிராமம், ரோஜாவனம் இண்டர் நேஷனல் பள்ளி வளாகத்தில் வருகிற 30-ம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை உட்பட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. பல்வேறு தனியார் மருத்துவமனைகள், காப்பீடு மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள், எலக்ட்ரானிக் நிறுவனங்கள், கணினி விற்பனை நிலையங்கள், ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் உட்பட 25-க்கு மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைக்கான பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டு 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 8-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி, டிப்ளமோ, பொறியியல், அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் மேலாளர், நிதி மேலாளர், தொழிற் நுட்பனர்கள், விற்பனை மேலாளர், விற்பனை பிரதிநிதிகள், காசாளர், மருத்துவ நுட்பனர்கள், டிப்ளமோ மற்றும் பட்டதாரி செவிலியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணியமர்த்தப்பட உள்ளனர்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் தங்களது கல்வி தகுதி சான்றிதழ் சுய விவரம் அடங்கிய படிவம், ஆதார், இருப்பிட சான்றிதழ், அசல் மற்றும் நகல்களுடன் சமீபத்தில் எடுக்கப்படட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  கொண்டு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு முகாம் சம்பந்தமான விவரங்களுக்கு 9843314240 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory