» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் : ஆட்சியர் அழைப்பு
புதன் 27, செப்டம்பர் 2023 4:04:49 PM (IST)
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். காப்பீடு செய்ய கடைசி நாள் 29.02.2024.

வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,203/- பிரீமியமாக செலுத்தி ரூ.84,050/- இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,463/- செலுத்தி ரூ.29,250/- இழப்பீடாகவும் பெறலாம். கடன் பெறும் விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்து காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தலாம்.
கடன் பெறா விவசாயிகள் தங்களது அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம். தேவையான ஆவணங்கள்: நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம்
காப்பீடு செய்வதற்கான காலக்கெடு விபரம்: வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய 2024-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி கடைசி நாளாகும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் கேட்டுக் கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!
புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)

பயிற்சி மாணவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்
புதன் 7, மே 2025 12:32:08 PM (IST)

பாரதிதாசன் பிறந்தநாள் விழா போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
செவ்வாய் 6, மே 2025 4:10:43 PM (IST)
