» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் உலக சுற்றுலா தின மாரத்தான் ஓட்டம்: ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்!
புதன் 27, செப்டம்பர் 2023 11:27:39 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா தூய்மை மாவட்டமாக மாற்றிட அனைவரும் முன்வர வேண்டும் என்று உலக சுற்றுலா தினத்தையொட்டி நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டியும், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையிலும் கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று (27.09.2023) நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை இணைந்து உலக சுற்றுலா தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை 6 மணிக்கு கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் முதல் மகாதானபுரம் வழியாக மீண்டும் ஜீரோ பாயிண்ட் வரை 6 கிலோமீட்டர் அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவேணி சங்கமம் கடற்கரைப் பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, சாலையின் இருபுறங்களிலும் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் கடற்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை தூய்மையாக வைத்திட முன்வர வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் பசுமை மாவட்டமாக மாற்றிடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் தனியார் பங்களிப்புடனும் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த வருட இறுதிக்குள் இப்பணைிகளை முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே இங்கு வருகைதந்துள்ள கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், அனைத்து பொதுமக்கள் நமது மாவட்டத்தை குப்பையில்லாத முழு தூய்மையான மாவட்டமாக மாற்றிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட சுற்றுலா துறையின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றதோடு, ஆதிதிராவிட மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக தலக்குளம் பகுதியை சார்ந்த வேலப்பன் ஆசான் அடிமுறை மற்றும் சிலம்ப விளையாட்டு நடைபெற்றது. மாரத்தான் ஓட்டம் மற்றும் தூய்மைப் பணிகளில் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் ஹனிபா கேட்டரிங் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரியில் மாணவ மாணவியர்கள், ஆபிஸர் ட்ரைனிங் அகாடமி, பேரிடர் கால நண்பர்கள், சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் மகேந்திரகிரி ஆகியவற்றின் உறுப்பினர்கள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜேஷ், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் சாகர், இ.கா.ப., கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மதியழகன், மகேஷ் குமார், உதவி இயக்குனர் (மாசு கட்டுப்பாடு) கலைவாணி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பிரேமலதா, துணைத் தலைவர் திரேஸ் மைக்கேல், உதவி சுற்றுலா அலுவலர் செல்வி.கீதாராணி, வட்டார மருத்துவ ஆலோசனைக் குழு உறுப்பினர் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)
