» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம் : மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
புதன் 27, செப்டம்பர் 2023 9:49:50 AM (IST)
ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு அளித்தது.
குமரி மாவட்டம், பள்ளியாடி ஒற்றைப்பனைவிளை பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற கலால் (ம) சுங்க இலாகா அலுவலர் சாமுவேல் வில்சன் என்பவர் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். கணவன், மனைவி இருவரும் பயனாளிகள். பாலிசி பிரிமியம் முதல் ஆண்டுக்கு ரூ.19.956/- 20.11.2021-ல் செலுத்தியுள்ளார். பாலிசி காலம் 20.11.2021 முதல் 19.11.2022 வரை உள்ளதாகும். இன்சூரன்ஸ் தொகை ரூ.2 லட்சம்.
வில்சன் என்பவருக்கு நெஞ்சுவலி காரணமாக 28.3.2022-ல் நாகர்கோவில் பெதஸ்தா மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் எடுத்துள்ளபோது இருதய இரத்த குழாய்களில் அடைப்புகள் உள்ளதால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யவேண்டுமெனவும் தெரிவித்து ஆஞ்சியோபிளாஸ்டி சிகிட்சை 28.3.2022 இரவில் முடித்துவிட்டு 31.3.2022-ல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சிகிட்சை பெறுவதற்குமுன் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ன்ஸ் அடையாள அட்டை. முன்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கைககளும் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையிலிருந்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு Claim No. CIR/2022/121320/4042361 dt: 28.3.2022 வழி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. SMS வழியாகவும் இமெயில் வழியாகவும் வில்சன் அறிந்துள்ளார். டிஸ்சார்ஜ் செய்யப்படும் நேரம்வரை மருத்துவ செலவுத்தொகை அனுமதிக்கப்படாமையால் மருத்துவமனையில் ரூ.1,92,111-ஐ வில்சன் என்பவரிடமிருந்து ரொக்கமாக பெற்றுள்ளனர்.
மருத்துவ செலவுத்தொகை கேட்டு மெயில்வழி 1.4.2022-ல் விண்ணப்பித்து 2.4. 2022-ல் வரப்பெற்ற பதிலில் இன்சூரன்ஸ் பாலிசி நிபந்தனைகளில் "Pre-Existing Disease : Disease related to Cardiovascular System" என்ற திருத்தம் 31.3.2022 முதல் சேர்க்கப்பட்டுள்ளதாகம், பணமில்லா சிகிட்சை மறுக்கப்பட்டதாகவும் Reimbursement claim-க்கு விண்ணப்பிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Grievance Redressal Officer, இன்சூரன்ஸ் ஓம்பட்ஸ்மன் பிரிவுக்கு மேல்முறையீடு செய்தும் மருத்துவ செலவுத்தொகை கிடைக்காமையால் தனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டநஷ்டங்களுக்கு பரிகாரம் வேண்டி கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த மாவட் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் சுரேஷ். உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி வில்சன் என்பவருக்கு மருத்துவச் செலவுத்தொகை ரூ.1,92,111/-ஐ 28.3.2022 முதல் 7% வருட வட்டியுடனும், மனவுளைச்சலுக்கு ரூ. 50,000/- நிவாரணத் தொகை மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.5,000/- ஆகியவற்றை இன்சூரன்ஸ் நிறுவனம் 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டுமென்றும் தொகை வழங்குதில் காலதாமதம் ஏற்பட்டால் மொத்த தொகைக்கும் 6% வருட வட்டி வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)
