» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு : தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:36:37 PM (IST)



விளாத்திகுளம் அருகே உள்ள கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர்.இவரது ஆட்டுக்குட்டி ஊரில் உள்ள பழமையான சுமாா் 30 அடி ஆழமான கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து ரவிசங்கர் விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 30 அடி ஆழ கிணற்றில் இறங்கி சரியான மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர். நீண்ட நேரம் உயிருக்கு போராடிய ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து

எப்படியும்Sep 26, 2023 - 06:34:27 PM | Posted IP 172.7*****

வெட்டதானே போறீங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory