» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு இந்திய அளவில் 3-வது இடம்!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:57:39 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு இந்திய அளவில் 3-வது இடம் கிடைத்துள்ளதை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம், சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இரு நாட்கள் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வையொட்டி, இன்று தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

P.S. RajSep 26, 2023 - 10:53:34 PM | Posted IP 172.7*****

வாழ்த்துக்கள். அப்படியே தூ.டி நகரில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துங்க. வஉசி சாலையில் இருபுறம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்துங்க... மக்கள் நடப்பதற்கு நடைமேடை இல்லை. மக்கள் சாலையில் நடக்கும் அவலம். மாநகராட்சி நிர்வாகம் இதை கவனிக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory