» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிஜேபி கூட்டணி முறிவு: அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகம்!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 8:27:54 AM (IST)



அதிமுக - பிஜேபி கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டதை வரவேற்று தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அதிமுக சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நேற்று பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பிஜேபி உடனான கூட்டணி இனி இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் தொண்டர்களின் மனநிலையை அறிந்து நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தை வரவேற்கும் விதமாக நேற்று இரவு  தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி முன்பு திரண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான இரா. சுதாகர் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இந்நிகழ்வில் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, நடராஜன், பில்லா விக்னேஷ், தனராஜ், கே.ஜே.பிரபாகர், திருச்சிற்றம்பலம், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆண்ட்ருமணி, வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள், நிர்வாகிகள் டைகர் சிவா, வடக்கு பகுதி துணைச் செயலாளர் செண்பகச்செல்வன், வலசை வெயிலுமுத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சத்யா லட்சுமணன், துணைச் செயலாளர்கள் ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், முத்துக்கனி, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன் தேவராஜ், பிஜேசி சுரேஷ், சாமுவேல், வெங்கடேஷ், மண்டல போக்குவரத்து பிரிவு இணை செயலாளர் லெட்சுமணன், ஏகே.மைதீன், நாகூர் பிச்சை, முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், நவ்ஷாத், ஜெயக்குமார், மற்றும் சொக்கலிங்கம், கொம்பையா, உலகநாத பெருமாள், சுப்பிரமணி பாண்டியன், ஜெகதீஸ்வரன், இசக்கி முத்து, சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, நிலாசந்திரன், மைதீன், காதர், கார்த்திக், திலகர், சங்கர்,  சோபன், வசந்த், சிதம்பரம்,  இராஜேஸ்வரி, சகாய ராஜா, உதயகுமார் உட்பட பெருந்திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

NandriSep 26, 2023 - 01:14:40 PM | Posted IP 162.1*****

#nandrimeendumvanthuratheenga.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory