» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்க நடவடிக்கை : ஏ.ஐ.டி.யூ.சி கோரிக்கை!

திங்கள் 25, செப்டம்பர் 2023 3:17:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் நலனுக்காக குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட குழு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் சேவை கட்டணம் என்ற பெயரில் நிதி விரயத்தை தடுக்க ஒப்பந்தம், தினக் கூலி, சுய உதவி குழு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை கணக்கில் கொண்டு அரசாணைக்கு குறைவான வழங்குகிறார்கள். 

பல வருடங்களாக பணிகளின் மூப்புரிமை குறித்து அறிய இயலவில்லை என்ற தகவலை கூறி அத்தகூலியாக உள்ளார்கள் தினக்கூலியும் இல்லை ஒப்பந்தகாரர் அரைகுறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப் படுகிறது. மாவட்ட ஆட்சியர் வருடாந்திர ஒப்பந்த பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த தொகை வழங்கப்படுவதாக தகவல் வழங்குகிறார்கள் ஆனால் எவ்வளவு ரூபாய் என்ற விபரம் தெரிவிப்பதில்லை ஒவ்வொரு பேரூராட்சியிலும் ஒவ்வொரு விதமாக சம்பளம் வழங்கப் படுகிறது. 

இவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை வருங்கால வைப்பு நிதி பிடித்தம் கிடையாது. இ.எஸ்.ஐ மருத்துவ வசதி கிடையாது. வேலைப்பளு அதிகம்,  ஆனால் குறைந்த சம்பளம். பணியிடத்தில் பாலியல் பேச்சு வேலைப்பழு, இழிவான பேச்சு, மிரட்டல் பேச்சு குறைகளை கேட்க கூட நாதி இல்லாத நிலையில் மன அழுத்தத்திற்கு உட்பட்டு வருகிறார்கள். தற்போதுகூட விளாத்திகுளம் புதூர் பேரூராட்சியில் 13 வருடமாக மேற்பார்வையாளர்களால் ஏற்பட்ட மன உளைச்சலால் விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டார். 

பல்வேறு உள்ளாட்சிகளில் குறைந்த நபர்களை வேலைக்கு வைத்து அதிகமான தூய்மை பணியாளர்கள் வேலை செய்வதாக கணக்கு காட்டி பணியாளர்கள் 'சம்பளத்தை சுரண்டுகிறார்கள். எனவே, தூய்மைப் பணியாளர்களின் குறைகளை தீர்க்க தூய்மை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளடக்கிய தூய்மை பணியாளர்கள் குறை தீர்க்கும் நாள் என்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை தங்கள் முன்னிலையில் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

R. ParamasivanSep 26, 2023 - 10:10:09 PM | Posted IP 172.7*****

God work this bad salary. Good cantcen. 👌👌

பகவதி ராஜன்Sep 26, 2023 - 09:21:54 AM | Posted IP 172.7*****

தூய்மை பணியாளர்களுக்கு முறையான சம்பளம் கிடைக்கவில்லை.கண்டிப்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி 2023ன் ஆண்டுபடி உள்ள ஊதியம் கிடைக்க வேண்டும்.( ஒப்பந்த முறையை ஒழித்தால் சீராக இருக்கும்).

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory