» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தோஷம் கழிப்பதாக பெண்ணிடம் 2½ பவுன் நகை அபேஸ்: மர்ம ஆசாமி கைவரிசை!
திங்கள் 18, செப்டம்பர் 2023 11:38:20 AM (IST)
மணவாளக்குறிச்சி அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 2½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளை சிவந்தமண் பகுதியை சேர்ந்தவர் புஷ்பாகரன். இவருடைய மனைவி சசிகலா (வயது 47). இவர்களின் மகள் சாலினி (24). புஷ்பாகரன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சசிகலா வீட்டு வேலை செய்து வருகிறார். சாலினிக்கு திருமணமாகி தாயார் சசிகலாவுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவும், சாலினியும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர், தான் குறி சொல்வதாக கூறி சசிகலாவிடம் கையை நீட்ட சொன்னார். உடனே அவர் கையை நீட்டியதும் 'வீட்டில் தோஷம் இருக்கிறது. அதை கழிக்க தண்ணீர் கொண்டு வாருங்கள்' என்றார்.
உடனே சசிகலா வீட்டுக்குள் சென்று செம்பில் தண்ணீர் எடுத்து வந்தார். அந்த தண்ணீரில் மஞ்சள், பச்சரிசி, புளி ஆகியவற்றை போட சொன்ன ஆசாமி, சாலினியின் காலில் அணிந்திருந்த 2½ பவுன் எடையுள்ள ஒரு ஜோடி தங்க கொலுசையும் கழற்றி போட சொன்னார். அதன்படி சாலினியும் தங்க கொலுசை கழற்றி செம்பில் போட்டார்.
அந்த மர்ம ஆசாமி தோஷம் நீக்குவது போல் நாடகமாடி, சசிகலா, சாலினி ஆகியோரின் கவனத்தை திசை திருப்பி செம்புக்குள் கிடந்த தங்க கொலுசை ஆசாமி அபேஸ் செய்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து செம்பில் போட்ட தங்க கொலுசை தேடிய போது காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா அப்பகுதி முழுவதும் மர்ம ஆசாமியை தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சசிகலா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை
புதன் 31, டிசம்பர் 2025 11:46:12 AM (IST)

அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்டு வரட்டும் : விஜய் வசந்த் எம்.பி புத்தாண்டு வாழ்த்து!
புதன் 31, டிசம்பர் 2025 11:33:44 AM (IST)

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)



.gif)