» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.56.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
சனி 16, செப்டம்பர் 2023 5:43:55 PM (IST)
ரூ. 56.78 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் வழங்கினார்.
குமரி மாவட்டம், கல்குளம் வட்டம், தக்கலை, அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பி. என். ஸ்ரீதர் தலைமையில், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர். கௌசிக் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் இன்று (16.09.2023) வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்யில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மாற்றுத் திறனாளிகளின் மேல் அதிக பற்று கொண்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களுக்கு இலவச பேருந்து பயன அட்டை, திருமண உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரனங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வந்தார்கள். வழியில் முதலமைச்சர் மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். மேலும் தங்களை மாற்றுத் திறனாளிகள் என்று எண்ணாமல் தாங்களே தங்கள் பணிகளை செய்திடும் வகையில் அவர்களுக்கான பிரத்தியேக உபகரனங்கள் வழங்கி வாழ்வில் ஒளியேற்றி வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலவலகத்தின் மூலம் 22,857 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அட்டை (UDID) 21822 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 5 வகையான பராமரிப்பு வழங்கும் திட்டத்தில் மொத்தம் 6917 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாதம் ரூபாய் 2000/- வீதம் ரூ. 2.68லட்சம் பராமரிப்பு உதவித் தொகையாக வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ரூ. 2.88 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு 27 நபர்களுக்கு வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ. 14.61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 396 நபர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர். உதவி உபகரனங்கள் வழங்கும் திட்டத்தில் 370 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.25 கோடி மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று ரூ. 1.05 லட்சம் மதிப்பில் ஒரு மாற்றுதிறனாளிக்கு நியோபோல்டு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, ரூ.3.18 லட்சம் மதிப்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், 38.35 லட்சம் மதிப்பில் 23 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களும், 8.80 லட்சம் மதிப்பில் 65 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசியும், ரூ. 13680 மதிப்பில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரமும், ரூ. 50000 மதிப்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஆவின் பாலகமும், ரூ.4.75 லட்சம் மதிப்பில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் மானியமும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன சான்று என மொத்தம் 135 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 56.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சிங்காரவேலர் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட 126 பயனாளிகளுக்கும், கல்குளம் வட்டத்திற்குட்பட்ட 253 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு மகளிருக்கான உரிமையினை மீட்டெடுத்து வருகிறார்கள். இது போன்று மேலும் பல திட்டங்கள் உருவாக்கி நலத்திட்டங்கள் வழங்கிட நாம் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் த.மனோதங்கராஜ் பேசினார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமினை பார்வையிட்டதோடு மாற்றுத் திறனாளிகளிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள், மேலும் முகாமில் உள்ள மருத்துவர்களிடம் மாற்றுத் திறனாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருண் சோபன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) புகாரி, வட்டாட்சியர்கள் கண்ணன் (கல்குளம்), ராஜேஸ் (அகஸ்தீஸ்வரம்) தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு, அகஸ்தீஸ்வரம்) ராஜாசிங், வர்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெகிழி கழிவு கலந்த சிமெண்ட் காங்கீரீட் பேவர் பிளாக் யூனிட்: அமைச்சர் திறந்து வைத்தார்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:51:27 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 3:00:32 PM (IST)

நர்ஸ் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:25:45 PM (IST)

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தளவாய்சுந்தரம் நியமனம்
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:15:31 PM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி : வாலிபர் படுகாயம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:09:37 PM (IST)

நாகர்கோவிலில் 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
புதன் 27, செப்டம்பர் 2023 4:44:14 PM (IST)
