» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைப்பு : நாகர்கோவிலில் பரபரப்பு!
சனி 16, செப்டம்பர் 2023 10:17:38 AM (IST)

நாகர்கோவிலில் கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டதால் ஏராளமான சாலைகள் படுமோசமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து தற்போது சாலைகள் சீரமைப்பிற்காக நிதி ஒதுக்கப்பட்டு தெருவாரியாக சாலை பணி நடந்து வருகிறது. அந்த வகையில் வடிவீஸ்வரம் நடராஜபுரம் ஆசாரிமார் தெற்கு தெருவில் நேற்று இரவு சாலை போடும் பணி மும்முரமாக நடந்தது.
அப்போது ஒரு திருமண மண்டபம் முன்பு சாலையில் கார் நின்றது. அந்த கார் யாருடையது என்று தெரியவில்லை. வெகுநேரமாக அதே இடத்தில் நின்றதால், சாலை பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அவசர கதியில் கார் நின்ற இடத்தை விட்டு விட்டு மற்ற இடங்களில் ஜல்லியை நிரப்பி சாலை போட்டனர்.
இதனை கவனித்த பொதுமக்கள் இது என்னய்யா, நடுவுல கொஞ்சம் சாலையை காணோம் என்று ஆதங்கத்தை தெரிவித்தனர். அதற்கு காரை தள்ள முடியாததால் மற்ற இடங்களில் சாலை போடுகிறோம் என சாலை அமைத்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் சிலர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு கிண்டலாக மீம்ஸ் செய்து பரப்பினர். இந்த வீடியோ வைரலானதால் நாகர்கோவிலில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது
சனி 13, செப்டம்பர் 2025 11:44:13 AM (IST)

நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 3பேர் கைது: 1½ கிலோ கஞ்சா, கார், பைக் பறிமுதல்!
சனி 13, செப்டம்பர் 2025 10:15:16 AM (IST)

செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)

பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)
