» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கேரள கழிவுகள் குவிப்பதை தடுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
வெள்ளி 15, செப்டம்பர் 2023 7:53:23 PM (IST)
கேரளாவிருந்து பல்வேறு விதமான கழிவுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் குவிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட துணை ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டு வந்த கழிவு பொருட்கள் கொட்டப்படுவது கவனத்திற்கு வந்துள்ளது. இதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இருந்த போதிலும் இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி, மீன் மற்றும் மருத்துவ கழிவுகள் இங்கு லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இது சுற்று வட்டாரத்தில் சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. ஆதலால் கேரளா எல்லையில் உள்ள நமது சோதனை சாவடிகளில் சோதனையை பலப்படுத்தி, கழிவுகள் எதுவும் நமது மாவட்டத்திற்கு கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சனி 4, ஏப்ரல் 2026 5:16:41 PM (IST)

ஈஸ்டர் திருநாள்: அன்பும், சகிப்புத்தன்மையும் பெருகட்டும் - விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
சனி 4, ஏப்ரல் 2026 4:48:36 PM (IST)

குமரி - திருப்பதி இடையே ஸ்லீப்பர் பஸ் வசதி அறிமுகம்: ஆன்மீகப் பயணிகள் மகிழ்ச்சி!
சனி 4, ஏப்ரல் 2026 3:38:08 PM (IST)

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: கன்னியாகுமரியில் பரபரப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 9:42:39 PM (IST)

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)

கோவில், வீடுகளில் திருட்டு: இருவர் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:37:15 AM (IST)

