» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
வெள்ளி 15, செப்டம்பர் 2023 4:25:16 PM (IST)

குமரி மாவட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார். குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராட்சி வட்டம் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
விழாவில் 2000 பயனாளிகளுக்கு கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-சென்னையில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க நான் சென்றேன். சாப்பிட்டுக்கொண்டிருந்த இடத்தில் ஒரு வயதான அம்மா இருந்தார். அவருடைய பிள்ளைகள் அவரை கோவிலில் விட்டுவிட்டு சென்று விட்டனர். கோவில் அன்னதானம் சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இதுபோன்று அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு சுமார் 13 அல்லது 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஒரு காலத்தில் கணவன் இறந்துவிட்டால் அந்த சிதையிலே மனைவியும் போட்டு எரிக்க வேண்டும். பெண்ணுக்கு சொத்தில் உரிமை கிடையாது. பெண் கேள்வி கேட்கக்கூடாது.
ஆளுகின்ற எந்த பொறுப்புக்கும் பெண் வரக்கூடாது. இப்படி எல்லாம் இருந்தது. குமரி மாவட்டத்தில் தான் பெண்கள் முறையான ஆடை அணிவதற்கு உரிமை கோரி போராடினார்கள். பெண்கள் சமூகத்தில் சமநிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு புதுமைபெண் திட்டத்தை தொடங்கினார்கள். நாட்டில் பெண்கள் படித்துவிட்டு உயர் கல்விக்கு செல்வது 24 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 72 சதவீதம் பெண்கள் உயர்கல்வி செல்கிறார்கள்.
நாடும், உலகமும் நம்மை திரும்பி பார்க்கின்ற அளவிற்கு நம்முடைய பெண்கள் இன்றைக்கு அதிகாரபடுத்தப்பட்டு உள்ளார்கள். மேலும் பெண்களுக்கு இலவச பஸ் பயணமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீபா ஆல்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெகிழி கழிவு கலந்த சிமெண்ட் காங்கீரீட் பேவர் பிளாக் யூனிட்: அமைச்சர் திறந்து வைத்தார்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:51:27 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 3:00:32 PM (IST)

நர்ஸ் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:25:45 PM (IST)

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தளவாய்சுந்தரம் நியமனம்
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:15:31 PM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி : வாலிபர் படுகாயம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:09:37 PM (IST)

நாகர்கோவிலில் 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
புதன் 27, செப்டம்பர் 2023 4:44:14 PM (IST)
