» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வி.ஏ.ஓ., கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 15, செப்டம்பர் 2023 1:38:07 PM (IST)

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவிபத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி மணல் கொள்ளையர்களால் அலுவலகத்திற்குள்ளையே வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த கொலை தொடர்பாக ராமசுப்பு,மாரிமுத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விசாரணை அதிகாரியாக ரூரல் டிஎஸ்பி சுரேஸ் நியமனம் செய்யப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் 31-சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 52-சான்று ஆவனம் மற்றும் சான்று பொருட்கள் ஆகியவை குறியீடு செயப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பானது இன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும் 3-ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி செல்வம் தீர்ப்பு அளித்தார்.
இந்த சம்பவம் நடந்து 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 143 நாட்களில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கை அரசு சிறப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் அவர்கள் திறம்பட வாதிட்டார்.
மக்கள் கருத்து
நெல்லை மைந்தன்Sep 15, 2023 - 10:00:26 PM | Posted IP 172.7*****
இந்த கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுத்தால்தான் மற்ற களவாணி பயல்களுக்கு பயம் வரும்.
TutiansSep 15, 2023 - 09:59:09 PM | Posted IP 172.7*****
Death sentence Only Solution of Culprits
நெல்லை மைந்தன்Sep 15, 2023 - 09:51:59 PM | Posted IP 172.7*****
இந்த கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுத்தால்தான் மற்ற களவாணி பயல்களுக்கு பயம் வரும்.
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

அங்கிட்டுSep 16, 2023 - 11:03:49 AM | Posted IP 172.7*****