» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் கடல் சீற்றம்: விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு தரை தட்டியது!
வெள்ளி 15, செப்டம்பர் 2023 12:13:16 PM (IST)

கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.
கன்னியாகுமரியில் இன்று காலை ஒரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரிகடல்நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா படகுகள் தரைதட்டி நின்றன.
அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப் படவில்லை.
இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்றகடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல்15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதனால் மீன்பிடித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாம்பரம் - திருவனந்தபுரம் அமித் பாரத் ரயிலைத் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை
சனி 2, மே 2026 12:34:24 PM (IST)

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)

தமிழகத்திற்குத் தனி ரயில்வே அமைச்சகம் தேவை : குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை
வெள்ளி 1, மே 2026 12:06:58 PM (IST)

குமரி மாவட்ட குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு!
வெள்ளி 1, மே 2026 10:36:50 AM (IST)

கன்னியாகுமரி கடலில் அமெரிக்க வாழ் சகோதரிகள் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
வெள்ளி 1, மே 2026 8:53:57 AM (IST)

வெப்ப அலை : நண்பகல் 12 முதல் 3 மணி வரை தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி செய்யத் தடை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:33:54 PM (IST)


