» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது
வியாழன் 14, செப்டம்பர் 2023 4:56:26 PM (IST)
குமரி மாவட்டத்தில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை திட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது
இந்த விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன. வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பப் பட்டன.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் தொடக்க விழா நாளை (15-ந் தேதி) நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் அவர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோட்டில் தொடக்கவிழா நடக்கிறது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை திட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெகிழி கழிவு கலந்த சிமெண்ட் காங்கீரீட் பேவர் பிளாக் யூனிட்: அமைச்சர் திறந்து வைத்தார்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:51:27 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 3:00:32 PM (IST)

நர்ஸ் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:25:45 PM (IST)

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தளவாய்சுந்தரம் நியமனம்
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:15:31 PM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி : வாலிபர் படுகாயம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:09:37 PM (IST)

நாகர்கோவிலில் 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
புதன் 27, செப்டம்பர் 2023 4:44:14 PM (IST)
