» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சென்னை - குமரி இரட்டை பாதை டிசம்பரில் நிறைவு : கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 11:59:45 AM (IST)
சென்னை-சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை பணிகள், வரும் டிசம்பருக்குள் முடிவடைகின்றன. இதையடுத்து, 'கூடுதலாக ஆறு சர்வீஸ் ரயில்கள் இயக்க முடியும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் பிரதான ரயில்வே கனவு திட்டமான, சென்னை, எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், 1998ல் துவங்கி, தற்போது மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக, மதுரை - திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டைப் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை, 2022ம் ஆண்டு மார்ச்சில் முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என, பல்வேறு காரணங்களால், இந்த திட்டப் பணிகள் தாமதமாகின. தற்போது, திருநெல்வேலி வரை, இரட்டை பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டம், இந்த ஆண்டுக்குள் முடிந்து விடும். இதன் மூலம், தென் மாவட்டங்களுக்கு ஆறு சர்வீஸ் ரயில்கள் அதிகரிக்க முடியும்.பெரும்பாலானவை புது ரயில் பாதைகள் என்பதால், 'சிக்னல்'களை மேம்படுத்தினால், தற்போதுள்ள விரைவு ரயில்களை, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

S. பூதலிங்கம், சென்னை.Jul 5, 2023 - 03:56:35 PM | Posted IP 172.7*****