» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.3,70,167 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

திங்கள் 20, மார்ச் 2023 8:13:37 PM (IST)

தேசிய மயமாக்கப்பட்ட இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு ரூ.3,70,167 வழங்க வேண்டுமென குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவன்கோடைச் சார்ந்த பால்ராஜ் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். தமிழ்நாடு அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் காப்பீடு செய்திருந்தார். அதன் பிறகு அவர் நோய் வாய்ப்பட்டதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்கான பணத்தை திரும்ப தரக் கோரி பி.டபிள்யூ.டி. சாலையில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலுள்ள காப்பீடு இழப்பீடு தொகை அனுமதி அளிக்கும் குழுவிடமும் மனு அளித்துள்ளார். 

இந்தக் குழு பால்ராஜின் மனுவை பரிசீலித்து ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் முறையான காரணம் தெரிவிக்காமல் இழப்பீட்டுத் தொகையை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் வழங்க மறுத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி பாதிப்படைந்த நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நுகர்வோருக்கு மருத்துவ செலவுத் தொகை ரூ.3,60,167, நஷ்ட ஈடு ரூ.7,500, வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆக மொத்தம் 3,70,167 ஐ வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என  உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory