» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: ஆளுநர், அமைச்சர் வரவேற்பு

சனி 18, மார்ச் 2023 10:22:23 AM (IST)



குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் இன்று காலை கன்னியாகுமரி வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். 

அரசு விருந்தினா் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்குப் பின், படகுத் துறைக்கு செல்லும் திரௌபதி முா்மு, தனிப்படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலையை பார்வையிடுகிறார்.  பின்னர், விவேகானந்த கேந்திரத்துக்கு செல்கிறாா். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சிக் கூடம் மற்றும் பாரத மாதா கோவிலுக்குச் சென்று பாா்வையிடுகிறாா். பின்னா் காலை 11.30 மணிக்கு, கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறாா்.

குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹெலிகாப்டா் தளம், அரசு விருந்தினா் மாளிகை, பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறை, விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை, முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமனப் பூங்கா, விவேகானந்த கேந்திர ராமாயண கண்காட்சிக் கூடம், பாரத மாதா கோயில் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனைக்குப் பின்னா் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். 

மேலும், கொட்டாரம் தொடங்கி முக்கிய சந்திப்புகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி, விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு சனிக்கிழமை பகல் 11.30 மணி வரை படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory