» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை குமரி வருகை: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

வெள்ளி 17, மார்ச் 2023 10:07:17 AM (IST)

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் நாளை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் நாளை (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்லும் அவர், தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். 

அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட உள்ளார். பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

என்னது தடையா ?Mar 17, 2023 - 12:48:44 PM | Posted IP 162.1*****

என்ன சொல்றேங்க ? சுற்றுலா பயணிகளுக்கு தடையா? அவங்க வானத்திலே இருந்து குதிச்சவங்களா ? அவங்களும் ஊரு சுற்ற சுற்றி பார்க்க தான் வராங்க தடை பண்ணுவது தேவையற்றது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory