» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

வியாழன் 16, மார்ச் 2023 5:11:14 PM (IST)

வெள்ளிச்சந்தை அருகே காதல் விவகாரத்தில் சிறுமியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

குமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே கீழமுட்டம் அலங்கார மாதா தெருவை சேர்ந்தவர் எவரெஸ்ட் (23). இவர் அழிக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சிறுமியை எச்சரித்தனர். இதனால் அவர் எவரெஸ்ட் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2013 -ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற எவரெஸ்ட் அவரது உடலில் டீசலை ஊற்றி தீவைத்துள்ளார். 

இதில் பலத்த்த தீக்காயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அதே மாதம் 29-ந் தேதி சிறுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து எவரெஸ்டை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். 

அதில், குற்றம் சாட்டப்பட்ட எவரெஸ்ட்டுக்கு கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனையும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 10 வருடம் சிறை தண்டனையும் மற்றும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.


மக்கள் கருத்து

இதைMar 16, 2023 - 08:38:21 PM | Posted IP 162.1*****

விட கொடிய தண்டனை சாத்தான்குளம் சைக்கோ போலீசுக்கு கொடுக்க வேண்டும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory