» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அமிர்தா பொறியியல் கல்லூரி மாணவர்களின் ஆய்வுதிட்டத்திற்கு தமிழக அரசு நிதிஉதவி!

வியாழன் 16, மார்ச் 2023 10:04:32 AM (IST)

நாகர்கோவில் அமிர்தா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பகவுன்சிலில் இருந்து ஆய்வுதிட்டத்திற்கான நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், மாணவர்களிடம் உள்ள திறனை கண்டறிந்து நமது மாநிலத்தின் நலனை மேம்படுத்துவதர்காக மாணவர் ஆய்வுத் திட்டங்கள் என்னும் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஆய்வுத்திட்டத்தின் முடிவுகளை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான மாநில கவுன்சில் (TNSCST) சமீபத்தில்அறிவித்தது. 

நாகர்கோவில் அமிர்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் இருந்து, பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவுகளில் ஐந்து ஆய்வுத்திட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டு ஒவ்வொரு திட்டத்திற்கும் அதற்கான நிதி உதவி வழங்கப்பட்டது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமிர்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி பொறியியல் பிரிவில் அதிக ஆய்வுத் திட்டங்களுக்கான நிதி உதவிகளைப் பெற்றுள்ளது. அமிர்தா கல்லூரி நிர்வாகம் சார்பாக, கல்வி இயக்குநர் முனைவர். டி. கண்ணன் மற்றும் நிர்வாக மேலாளர் வி.பிரபாகரன் ஆகியோர், சாதனை படைத்த மாணவர்களையும் அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர்களையும் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory