» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் ஆபத்தான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை - பொதுமக்கள் கோரிக்கை!

சனி 28, ஜனவரி 2023 11:03:00 AM (IST)



தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் கலைஞர் அரங்கம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இங்கு கால்வாய் அமைத்த பின்னர் பெரும்பாலான பகுதிகளில் கான்கிரீட் மூடி அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் கடப்பா கல் மூலம் கால்வாய் மூடப்பட்டுள்ளது. கால்வாய்க்காக தோண்டிய குழி சரிவர மூடப்படாமல் உள்ளது. சாலை சமநிலையில் இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். 

மேலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. இதுபோன்று தூத்துக்குடியின் பிரதான சாலையான தமிழ் சாலையில் நீதிமன்றத்தில் இருந்து மில்லர்புரம் வரையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டு தற்போது வரை சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பணிகளை முழுமையாக நிறைவேற்றி, விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

எல்லாம்Jan 28, 2023 - 05:23:58 PM | Posted IP 162.1*****

காசு பணம் துட்டு மணி மணி மணி , சாக்கடை கால்வாய் ரோடு சிமெண்ட் சாலை ஸ்மார்ட் சிட்டி என்று பல பல

OOPSJan 28, 2023 - 01:59:43 PM | Posted IP 162.1*****

இந்த ஊரில் எப்பொழுதுமே உடைஞ்ச ரோடுதான். ஏன் என்றால் இங்க தேர்ந்தெடுக்கப்படும் MLA க்கள் அப்படி இருக்காங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory