» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய உணவக உரிமையாளர் மீது விசாரணை: ஆட்சியர் பேட்டி!

வெள்ளி 27, ஜனவரி 2023 4:27:20 PM (IST)



கன்னியாகுமரியில் என்.சி.சி. முகாமில் காலை உணவு சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளை ஆட்சியர் நேரில் சந்தித்து பேசினார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:- மத்திய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தம் செய்யும் பணி தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களால் இன்று கன்னியாகுமரியில் மேற்கொள்ளப்பட்டது இதில் 150 மாணவ மாணவிகள் ஈடுபட்டுள்ளார்கள். 

இப்பணியில், கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, புனித அந்தோணியார் பள்ளிகளை சார்ந்த தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்கள் கடற்கரை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளார்கள். காலை உணவின் ஒவ்வாமை காரணமாக 13 மாணவ, மாணவியர்கள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதை இன்று நேரில் பார்வையிட்டதோடு, அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. தற்போது மாணவ, மாணவியர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும், மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கிய உணவக உரிமையாளர் மீது விசாரணை மேற்கொள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார். 

ஆய்வின்போது, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், மருத்துவக்கல்லூரி முதல்வர் சுகந்தி இராஜகுமாரி, கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேஷ், உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள், விஜயலெட்சுமி, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் விஜயன், வழக்கறிஞர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து

ஆண்டJan 28, 2023 - 12:23:01 PM | Posted IP 37.12*****

பரம்பரையா இருப்பான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory