» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது: எச்.ராஜா பேட்டி

வெள்ளி 27, ஜனவரி 2023 2:58:14 PM (IST)

"திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான்" என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா தெரிவித்தார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி யாத்திரை மேற்கொள்ள உள்ளார். தமிழைத் தேடி யாத்திரை என்றால் தமிழ் தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம். 

திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடைத்தேர்தல் வேட்பாளர் என்று சொன்னதும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கை வந்து விட்டது. தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க, தெரிவித்து இருந்தது. 

ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார். 

தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என தி.மு.க. அமைச்சர்களே ஒப்புக்கொண்டார்கள். இதனால் மக்கள் தி.மு.க. பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள். எனவே எதிர்த்து போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார் என்று தான் தெரிய வேண்டும். காங்கிரசுக்கு கமல் ஹாசனின் ஆதரவு குழப்பத்தை தான் தரும். ஜீரோ ப்ளஸ் ஜீரோ, ஜீரோ தான் என்ற கணித முறைப்படி தான் கமலஹாசனின் ஆதரவு அமையும்" என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து

வன்ட்டான்Jan 27, 2023 - 03:43:43 PM | Posted IP 162.1*****

பூமரு... அப்போ இத்தனை வருஷம் எல்லாரும் அழிசசாங்களா?? அழிஞ்சு போய் இருக்கனுமே... ஒருத்தர் தமிழ் இனி மெல்ல சாகும்னு சொல்லி இருக்காரே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory