» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி துறைமுகத்தில் 10 டன் நிலக்கரியை கடத்த முயற்சி : பாேலீஸ் விசாரணை

வெள்ளி 27, ஜனவரி 2023 11:09:09 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 10 டன் நிலக்கரியை லாரியுடன் டிரைவர் கடத்த முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலக்கரியை எகிப்து நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக துறைமுகத்தின் 2வது தளத்தில் இருந்து 7வது தளத்திற்கு லாரி மூலம் கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 டன் நிலக்கரியுடன் லாரியை, டிரைவர் கிரீன்கேட் வழியாக கடத்த முயன்றுள்ளார். துறைமுக நுழைவு வாயிலில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் விஜய ஆனந்த (45) என்பவர் நேற்று தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான லாரி டிரைவர் தூத்துக்குடி முத்தையாபுரம் அயன்கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சையா மகன் காத்திக் குமார் (26) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்த முயன்ற நிலக்கரியின் மதிப்பு ரூ.2.45 லட்சம் ஆகும். தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியுடன் நிலக்கரியை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

ஆண்டJan 27, 2023 - 04:11:16 PM | Posted IP 162.1*****

பரம்பரை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory