» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா

வியாழன் 26, ஜனவரி 2023 11:53:53 AM (IST)நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து  கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது

நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதிய திறந்த வெளி கலையரங்கம் கட்டுவதற்கு ராஜ்யசபா எம் பி எ.விஜயகுமார் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து 15 லட்சம்  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த திறந்த வெளி கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா குடியரசு தினத்தன்று (26-01-2023) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் செந்தில் குமார் தலைமை வகித்தார். 

பெற்றோர் சங்கத்தின் தலைவர் எ.மரிய ஸ்டீபன், துணைத் தலைவர் சுந்தர், செயலாளர் செல்வன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முன்னாள் எம்பி விஜயகுமார் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி கலையரங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை கலை நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தினர். இறுதியாக பள்ளியின் மூத்த ஆசிரியை பியூலா ஜாஸ்மின் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் மாணவ மாணவியரும் பெற்றோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory