» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத்துக்கு தீவிர சிகிச்சை!!
புதன் 25, ஜனவரி 2023 4:39:12 PM (IST)
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டம் தக்கலை அருகே மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் (68). பேச்சாளரும் இலக்கியவாதியுமான இவருக்கு நேற்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் நாஞ்சில் சம்பத்தை அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது நாஞ்சில் சம்பத் மயக்க நிலையில் காணப்பட்டார்.
இன்று காலை வரை அவருக்கு மயக்கம் தெளியவில்லை. டாக்டர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நாஞ்சில் சம்பத்திற்கு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சற்று குறைவாக உள்ளதாகவும் சர்க்கரை நோயின் அளவு அதிகமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் நேற்று அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்ததைவிட உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆனால் இன்னும் மயக்க நிலை யிலேயே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கட்சியிலிருந்து விலகி 2012-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.
தினகரன் அ.ம.மு.க.வை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை என்று கூறி கட்சியில் சேரவில்லை. பின்னர் அரசியல் இருந்தே விலகுவதாக அறிவித்து விட்ட நாஞ்சில் சம்பத் சமீபகாலமாக தி.மு.க. நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வந்தார். தற்போது இலக்கியம் சார்ந்த மேடை நிகழ்ச்சிகளில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று வருகிறார். மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)

