» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சேவைக் குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6½ லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

புதன் 7, டிசம்பர் 2022 3:24:57 PM (IST)

தீவிபத்து ஏற்பட்ட கடைக்கு காப்பீட்டு நிவாரணத் தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6லட்சத்து 50ஆயிரம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி பார்க் வியூ பஜாரில் ரொசாரி போரஸ் என்பவர் பேன்சி கடை நடத்தி வந்தார். இந்த கடையை அவர் ரூ.9,00,000க்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 25.03.2012 அன்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு 25க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்தன. இதில் மேற்கண்ட ரொசாரி போரஸ் கடையும் ஒன்றாகும். தீ விபத்து ஏற்பட்ட கடைகளில் ஒரு சில கடைகளுக்கு சம்பவம் நடந்த ஓராண்டுக்குள் காப்பீட்டுத் தொகை கிடைத்து விட்டது. ஆனால் இவருக்கு மட்டும் விபத்துக்கான காப்பீட்டுத் தொகை  இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கிடைக்கவில்லை. உடனடியாக இவர் நுகர்வோர் அமைப்பு மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு விபத்துக்கான காப்பீட்டுத் தொகை ரூ.6,00,000 ஐ 01.05.2013லிருந்து 6 சதவீத வட்டியுடனும்,  நஷ்ட ஈடு ரூ.40,000  மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.10,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory