» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவட்டார் சந்தையில் ரூ.15லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணிகள் துவக்கம்!
செவ்வாய் 6, டிசம்பர் 2022 4:55:33 PM (IST)

திருவட்டார் சந்தையில் ரூ.15 இலட்சம் மதிப்பில் மேற்கூரை அமைப்பதற்கான பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட திருவட்டார் சந்தையில் மேற்கூரை அமைப்பதற்கான பணியினை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (06.12.2022) துவக்கி வைத்து, தெரிவிக்கையில தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சாலையின் தரத்தை மேம்படுத்துதல், சீரமைத்தல், சந்தைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருவட்டார் சந்தையில் மேற்கூரை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை வைத்தார்கள். இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றதன் அடிப்படையில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றையதினம் திருவட்டார் சந்தையில் மேற்கூரை அமைப்பதற்கான பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், செயல் அலுவலர் மகாராஜன், கண்ணனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ஜாண்பிரைட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)
