» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாபர் மசூதி இடிப்பு தினம்: திருவள்ளுவர் சிலை உட்பட கன்னியாகுரியில் பலத்த பாதுகாப்பு!
திங்கள் 5, டிசம்பர் 2022 12:15:23 PM (IST)

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுரியில் திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட அனைத்து பகுதிளிலும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டிசம்பர் 6-ந்தேதியான நாளை (செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகும். இதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

