» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி: டிச. 7ல் நேரடி நியமன தேர்வு
சனி 3, டிசம்பர் 2022 12:23:38 PM (IST)
ஆவினில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கன்னியாகுமரி ஆவின் பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) 53 பிரதம சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 6500 லிட்டர் பால் கொள்முதல் செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காலியாக உள்ள 1 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள 50 வயதுக்குட்பட்ட சொந்தமாக இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடனும் வரும் 07.12.2022 அன்று காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், லிட்., நாகர்கோவில் என்ற முகவரியில் நடைபெறும் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

கன்னியாகுமரி கடல் அலையின் சீற்றத்தால் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:09:27 AM (IST)

நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 4:58:02 PM (IST)
