» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் பேருந்து நிலையங்களில் ரூ.6 கோடியில் மறுகட்டமைப்பு பணிகள் துவக்கம்!

செவ்வாய் 29, நவம்பர் 2022 12:49:26 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையங்களில்    ரூ.6 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் மற்றும் தனியார் புறநகர் (ஆம்னி) பேருந்து நிலையங்களில் மறுகட்டமைப்பு மேற்கொள்ளும் பணியினை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஆகியோர் முன்னிலையில் இன்று அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கேற்ப பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை பொதுமக்களின் நலன்கருதி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தை குப்பையில்லா குமரி மாவட்டமாக மாற்றுவதற்காகவும், நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றுவதற்காகவும், பசுமையான மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான வடசேரி கிறிஸ்டோபர் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வடசேரி புறநகர் தனியார் (ஆம்னி) பேருந்து நிலையங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள மூலதன மானிய நிதி இயக்குதல் மற்றும் பராமரிப்பு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வடசேரி பேருந்து நிலையத்தில் புதிய கடைகள் கட்டுவது மற்றும் பேருந்து நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.4 கோடி மதிப்பீட்டிலும், வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தினை புதிதாக அமைத்திட ரூ.2 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.6 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ள இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதோடு, இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவஹர், மாமன்ற உறுப்பினர் கலாராணி, அரசு வழக்கறிஞர் மதியழகன், காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ஆனந்த், வழக்கறிஞர்கள் சதாசிவம், அகஸ்தியன் மற்றும் தில்லை செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory