» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்ததால் பல கோடி ரூபாய் இழப்பு

செவ்வாய் 29, நவம்பர் 2022 12:37:49 PM (IST)

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் தொழிலாளர்கள் ரப்பர் கழக கோட்ட மேலாளர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 18-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இதையொட்டி கோதையாறு, சிற்றாறு, மணலோடை மற்றும் கீரிப்பாறை கோட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தினர்.தற்போது நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக ரப்பர் கழகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைபோன்று தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. தோட்டம் தொழிலாளர் சங்கத்தினர் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் எம்.வல்சகுமார், தலைவர் பி.நடராஜன் மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory