» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குழித்துறை கல்லூரியில் ரூ.92 இலட்சம் மதிப்பில் ஆய்வுக்கூடம்: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு

சனி 26, நவம்பர் 2022 5:27:24 PM (IST)



குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  ரூ.92 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆராய்ச்சி கூடத்தினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (26.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு மாணவ, மாணவியர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரி தரத்தை உயர்த்துதல், மேம்படுத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதோடு, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் துரிதமாக செயலாற்றி வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக, குழித்துறை நகராட்சியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது நீண்ட காலமாக செயல்பட்டு கொண்டிருப்பதோடு, இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அரசு கட்டிடமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றபின், இக்கல்லூரியில் புதிய ஆராய்ச்சி கூடம் அமைக்க கட்டிடம் கட்ட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்கள். அதனடிப்படையில், ரூ.92 இலட்சம் மதிப்பில் ஆராய்ச்சி கூடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பணிகள் குறித்து இன்றையதினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், 16 வகுப்பறைகள், 12 கழிப்பறைகள் கட்டிடம் மற்றும் அணுகுசாலை அமைத்தல் வேண்டுமென்ற காரணத்தினால் ரூ.4.88 கோடி மதிப்பிலான புதிய பேரணை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியினை ICT Academy-யின் இணைப்பு கல்லூரியாக மாற்றுவதற்காக இக்கல்லூரியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், தரத்தினை மேம்படுத்தும் வகையில் இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் உஷா, உதவி கோட்ட பொறியாளர் மோகன் தாஸ், பொறியாளர் அய்யப்பன், குழித்துறை நகராட்சி 13-வது வார்டு உறுப்பினர் மெர்லின் தீபா, 3-வது வார்டு உறுப்பினர் ஷாலினி சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory