» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கணவரின் தொடர்பால் விபரீதம்: 1½ வயது குழந்தையை கொன்று இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை!
வியாழன் 24, நவம்பர் 2022 4:41:47 PM (IST)
நெல்லை தேவர்குளம் அருகே கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் 1½ வயது குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(30). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துப்பாண்டி என்பவரது மகள் பிரவீனாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ வயதில் அகிமா என்ற பெண் குழந்தை உள்ளது.
மகேந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரவீனாவும், அவரது குழந்தையும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர். இதனை பார்த்த முத்துப்பாண்டி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தகவல் அறிந்த தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரவீனா, அவரது குழந்தை அகிமா ஆகியோரின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)
