» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் : பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை

வியாழன் 24, நவம்பர் 2022 11:36:24 AM (IST)சாமிதோப்பு தலைமை பதிக்குள் விதிமுறைகளை மீறிய உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார். 

பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி அய்யாவை உணர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புனித தலமாகும். அய்யாவின் பதிக்குள் சென்று வழிபட விரும்புவோர் ஆண்களுக்கு உண்டான விதிமுறைகளான மேலாடை தவிர்த்தல், தலையில் தலைப்பாகை அணிதல், நெற்றியில் திருநாமம் இடல் போன்ற கட்டாய விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை தி.மு.க.வின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ், சாமிதோப்பு தலைமை பதிக்குள் அழைத்து சென்றுள்ளார். உடன் சென்ற அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேலாடையின்றி, தலைப்பாகை அணிந்து சென்றுள்ளனர். 

ஆனால் அய்யாவை அவமதிக்கும் வகையில், அவர் வகுத்து வைத்த விதிமுறைகளை வேண்டுமென்றே மீறும் வகையில் உதயநிதி ஸ்டாலினும், மகேசும் செயல்பட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலின், மகேஷ் ஆகியோர் தாங்கள் செய்த தவறுக்கு அய்யாவை வணங்கி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும், அவர்களை பதியின் சார்பில் உள்ளே அழைத்து சென்ற முதன்மை குரு பால ஜனாதிபதி தாம் வகிக்கும் பொறுப்பை துறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory