» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆக்கிரமிப்பாளர்களிடம் மாமூல் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: பாஜக வழக்கறிஞர் அணி கோரிக்கை!
புதன் 23, நவம்பர் 2022 12:38:21 PM (IST)

தூத்துக்குடியில் மாநில நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பாளர்களிடம் மாமூல் வசூலிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாஜக ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு தலைவர் தங்கராஜ் காந்தி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனு : தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை வளர்ந்துவரும் ஒரு கிராம ஊராட்சி ஆகும். தட்டப்பாறை விலக்கு முதல் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை புதுக்கோட்டையையும் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கிறது.
மேற்படி மாநில நெடுஞ்சாலை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சாலை சுருங்கி உள்ளது. இச்சாலையில் சிவந்தி ஆதித்தனார் மன்றம் முதல் சார்பதிவாளர் அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் மீன் வியாபாரிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் காலை 7 மணி முதல் 11 மணி வரை வியாபாரம் செய்து வருவதால் பொது மக்களுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் பெருத்த இடையூறாக உள்ளது. மேலும் இதன் மூலம் இது சுகாதாரகேடும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து மேற்படி நபர்களிடம் கூறியபோது அவர்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும், ஊராட்சிமன்ற நிர்வாகிக்கும் மாதம் மாதம் தாங்கள் 'கப்பம்' கட்டுவதாக கூறி வருகின்றனர். இவர்களால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், ஆக்கிரமிப்பாளர்களிடம் மாமூல் வாங்கி வரும் அரசு ஊழியர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

TN69Nov 23, 2022 - 02:10:10 PM | Posted IP 162.1*****