» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நவ.24ல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

செவ்வாய் 22, நவம்பர் 2022 12:37:53 PM (IST)

சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியில் வருகிற 24ம் தேதி TATA ELECTRONICS நிறுவனத்தின் சார்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்  நடைபெறவுள்ளது

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரி, சுங்கான்கடை இணைந்து TATA ELECTRONICS நிறுவனத்தின் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை 24.11.2022 (வியாழன்) காலை 09:00 மணி முதல் சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியில் வைத்து நடத்தப்படவுள்ளது.

இந்த முகாமில் ஓசூரில் அமைந்துள்ள TATA ELECTRONICS நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று  18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை மட்டும் நேர்காணல் நடத்தி இளநிலை தொழில் நிபுணர்கள் பணிக்காலியிடத்திற்காக தேர்ந்தேடுக்கவுள்ளனர். பட்டதாரிகள், Diploma, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. மாத சம்பளம் 16,557 ரூபாய் இந்நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பணிநியமனம் வழங்கப்படுகிறது. மேலும் பணியில் சேர்ந்து ஒரு வருட அனுபவத்திற்கு பிறகு இளநிலை (தயாரிப்பியல்) பட்டப்படிப்பில் சேர வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த பணி வாய்ப்பினை பெற விரும்பும் பெண்கள் தங்களது 12 ஆம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் (TC), 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அசல் மதிபெண் சான்றிதழ் (MARK SHEET), ஆதார் அட்டை, PASSPORT SIZE புகைப்படம் ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் நாளில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் tnprivatejobs.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory