» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாயமான இளம்பெண் கள்ளக்காதலனுடன் தற்கொலை

செவ்வாய் 22, நவம்பர் 2022 8:06:41 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே மாயமான இளம்பெண் வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கருமந்துறை வனப்பகுதியில் கிழாக்காடு என்ற இடத்தில் வாலிபர் மற்றும் இளம்பெண் தற்கொலை செய்து பிணங்களாக கிடந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், தொரடிப்பட்டு ஊராட்சி வண்டாபாடி கிராமத்தை சேர்ந்த பூபாலன் (26) என்பதும், இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாயமானதும் தெரியவந்தது. 

பூபாலனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நெல் அறுவடை எந்திர டிரைவரான பூபாலன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஸ்ரீவைகுண்டம் அருகே அனவரதநல்லூரை அடுத்த ஆழிக்குடி கிராமத்தை சேர்ந்த மாரி முத்து என்பவரின் மனைவி வேம்புராஜ் (24) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக் கம் ஏற்பட்டு உள்ளது. வேம்புராஜுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இதனிடையே கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தால் என்ன செய்வது என்று யோசித்த பூபாலனும், வேம்புராஜும் கடந்த மாதம் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெளியேறி ஊர், ஊராக சுற்றியதாக தெரிவித்தனர். இந்த கள்ளக்காதல் ஜோடி காணாமல் போன நிலையில் இருவீட்டாரும் அவர்களை தேட தொடங்கினர். இந்த நிலையில் கருமந்துறை வனப்பகுதியில் அவர்கள் இருவரும் பிணமாக கிடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்த நிலையில், இருவீட்டாரும் தேடத்தொடங்கியதால் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணினர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் விஷம் குடித்து இறந் தார்களா? அல்லது எப்படி இறந்தார்கள் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகே தெரியவரும் என்று போலீசார்


மக்கள் கருத்து

அடேய் அட்மின்Nov 23, 2022 - 01:48:36 AM | Posted IP 162.1*****

அது கள்ள காதல் இல்லடா... கள்ள காமம்... கள்ளகுறிசி காமம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory