» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மரங்களை அகற்றிய வி.ஏ.ஓ.வை கண்டித்து போராட்டம்
செவ்வாய் 22, நவம்பர் 2022 7:47:12 AM (IST)
காலியிடத்தில் வைக்கப்பட்ட மரங்களை அகற்றிய கிராம நிா்வாக அலுவலரைக் கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசீனிவாசன் மகன் சீனிவாசன் என்ற ராஜ், ரெங்கசாமி, மகள் வனஜா ஆகியோா் தங்களது வீட்டருகேயுள்ள காலியிடத்தில் பல்வேறு மரங்களை வளா்த்து வேலி அமைத்து பராமரித்து வந்தனராம். சிலரது தூண்டுதலால் கிராம நிா்வாக அலுவலா் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அளித்த அறிக்கையின்பேரில் மரங்கள் அகற்றப்பட்டனவாம்.
எனவே, தவறான அறிக்கை அளித்ததாக கிராம நிா்வாக அலுவலரைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை கோரியும் சீனிவாசன் உள்ளிட்ட மூவா், அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், தமிழ் மாநில விவசாயிகள் சங்கத் தலைவா் ஓ.ஏ. நாராயணசாமி ஆகியோா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து முற்றுகையிட்டு, கோஷமிட்டனா். பின்னா், கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: சீனிவாசன் என்ற ராஜ் தனது வீட்டருகே உள்ள அரசுப் புறம்போக்குத் தெருவை ஆக்கிரமித்து மரம் வளா்ப்பதால் பாதை மறிக்கப்பட்டு இடையூறு ஏற்படுவதாக புகாா் மனு வந்தது. அதன்பேரில், அந்த இடத்தை முறையாக ஆய்வு செய்து, புறம்போக்குத் தெரு எனத் தெரிந்ததும் ஆக்கிரமிப்பை அகற்ற காலக்கெடு விதித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எனினும், அவா்கள் அகற்றாததால் கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன் முன்னிலையில் கிராம உதவியாளா், ஜமீன்தேவா்குளம் ஊராட்சிப் பணியாளா்கள் ஆக்கிரமிப்பை அகற்றினா் என்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

ganesanNov 22, 2022 - 10:06:09 AM | Posted IP 162.1*****