» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவடத்தில் குரூப் 1 தேர்வு மையத்தில் ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு
சனி 19, நவம்பர் 2022 12:07:03 PM (IST)

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (19.11.2022) நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நேரில் பார்வையிட்டு, தெரிவித்ததாவது :– தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
இத்தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் 7331 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர். காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுக்காக 2 பறக்கும் படைகள், 6 இயக்க ஊர்திகள் (Mobile Unit) மற்றும் 22 ஆய்வு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 22 மையங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுக் கூடங்களில் 22 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)
