» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாமிரபரணி ஆற்றின் தண்ணீரில் தார்சாலை கழிவுகளை கொட்டிய அவலம்!
சனி 19, நவம்பர் 2022 10:08:43 AM (IST)

தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றில் தார் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி- திருநெல்வேலி இந்திய தேசிய சாலையான வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு நிறுவனம் 17ம் தேதி இரவு, தார் கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றி தாமிரபரணி ஆற்றில் கொட்டி உள்ளனர். இந்த செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு தலைவர், மு.சுகன் கிறிஸ்டோபர் சமூக வலைதளங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினார்.
மேலும் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்கு திருவைகுண்டம் வட்டாச்சியர் வந்து ஆய்வு செய்து, அறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார். இதுபோன்று தார் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய ஆதரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

MauroofNov 23, 2022 - 07:00:37 PM | Posted IP 162.1*****