» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினம் : குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மரியாதை

திங்கள் 26, செப்டம்பர் 2022 5:50:35 PM (IST)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினத்தையொட்டி குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பணியினை நினைவு கூறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 68-வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம் சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷ்யா, வருவாய் அலுவலர் லெலின், சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory