» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நவராத்திரி, தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்

திங்கள் 26, செப்டம்பர் 2022 5:37:02 PM (IST)

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இயங்கி வரும் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவையை நீட்டிக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07355) ஹூப்ளியில் இருந்து அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு இராமேஸ்வரம் வந்து சேரும். 

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07356) ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 02 முதல் ஜனவரி 1 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், யெஸ்வந்த்பூர் (பெங்களூர்), பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு... 

B) சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நவராத்திரி, தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

1. தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06001) புதன்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 21 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 5 புதன்கிழமை அன்று நாகர்கோவிலி லிருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். 
.
2. நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06040) அக்டோபர் 25 செவ்வாய் கிழமை அன்று நாகர்கோவிலி லிருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அக்டோபர் 25 அன்று இயக்கப்பட இருக்கும் நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில் (06040) சாத்தூர் தவிர மற்ற ரயில் நிலையங்களில் இன்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

SuriyadeviSep 30, 2022 - 06:41:38 AM | Posted IP 162.1*****

Chennai to Bangalore Sunday morning

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory