» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகள்: விஜய் வசந்த் எம்பி தொடங்கி வைத்தார்!

திங்கள் 26, செப்டம்பர் 2022 12:22:16 PM (IST)



கன்னியாகுமரியில் புதிய பள்ளிக் கட்டிடம் பணிகளை விஜய் வசந்த் எம்பி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட எல்.எம்.பி.சி மேல்நிலைப்பள்ளியில் காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட வகுப்பறையை விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்.

மேலும் குருந்தன்கோடு ஒன்றியம் சைமன் காலனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோடிமுனை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே. டி. உதயம், வட்டார தலைவர் அசோக்ராஜ், புத்தளம் பேரூராட்சி தலைவர் ரங்கன், வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் நிக்சன் ஞானதாஸ், மாவட்ட துணைத் தலைவர் லாரன்ஸ், வட்டார பொது செயலாளர் ரஜனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory